பலமே அம்பலமே பொன்னம்பல சிவமே ...என்
மருளும் மானோடு அருளும் வளுவோடு காணும் உன் கோலமே
கால்கள் தானாட கனகசபை ஆட
காணுதல் லாபமே
உன் நெற்றிக்கண் ஆட நெளியும் பாம்பாட தருமங்கள் வாழுமே
சிவமே ...சிவமே ..சிவமே ..சிவமே
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
எங்கள் பலமே உந்தன் பதமே ஓம். நமச்சிவாய (2) (பலமே..
ஆறாக்காயம் இந்த ஆறடி தேகமய்யா -அதில்
ஆடும் பாதம் அம்பலவாணமய்யா (2)
எழுந்தால் ஜோதி அமர்ந்தால் யோகி
நடித்தல் கலையில் நீயோர் ஞானி
பித்தனே உந்தன் நர்த்தனம் கண்டு
சித்தமே தெளியுமே
சிவமே ..சிவமே ..சிவமே ..சிவமே (2)
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
எங்கள் பலமே உந்தன் பதமே ஓம் நமச்சிவாய (2) (பலமே ...
ஆடும் கூடம் ஓர் ஐந்தென சொன்னதய்யா
அதில் ஆடும் பாதம் அம்பலவாணமய்யா (2)
அண்ணாமலையோ அதன் மேல் சடையோ
ஆடாதிருந்தால் அகிலம் இலையோ
சித்தமே உந்தன் மெய் நடம் கண்டு
உள்ள மே மென்மையோ
சிவமே . சிவமே ..சிவமே ..சிவமே . (2)
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
எங்கள் பலமே உந்தன் பதமே ஓம் நமச்சிவாய ...(2)
1 comments:
அருமை நன்றி
Post a Comment