Sample Text

August 7, 2014

மனமே மனமே

மனமே மனமே மயங்காதிரு
மாகாளித்தாய் மடி சேர்ந்திடு (2)
நெற்றியிலே திரு நீறு
நெஞ்சத்திலே மனச்சோர்வு
ஆயிரம் கண். உடையவளே
அடைக்கலம் என மாறு
சுடுநீர் போல மனமே
இளநீர் ஆகும் உடனே
இச்சன்னிதியில். அபயம். இருக்க
ஏக்கம் .....கொள்ளாதே..்!
ஓம் சக்தி ஓம் சக்தி. திரு நாம்மே
ஓயாமல் சொன்னாலே நலமாகுமே
.....(மனமே
கருநாகமே திரு மேனியில். புரண்டாடுதே -அது
கரையேற பல காலம் வழி. தேடுதே
மனமே கண் மூடி
புரண்டாய் தெருக்கோடி
அம்மா மாகாளி அவளது மடிதேடி
ஓடி  ஒரு வார்த்தை. பேசாத்தே ன்
காயும் பயிர் போல முகவாட்டமேன்
பொன்னி ஆறு அன்னை மனசு
ஏக்கம் கொள்ளாதே
ஓம் சக்தி ஓம் சக்தி திருநாம்மே
ஓயாமல் சொன்னாலே நலமாகுமே ....(மனமே
கருவேப்பிலை ஒரு நாளில் சருகாகுமே -நம்
மாகாளி வேப்பிலையோ மருந்தாகுமே -(2)
சருகாய் உலருவதும் மருந்தாய் மாறுவதும்
மனதே உனது வசம் உரைப்பது சந்நிதானம்
மாயி மாகாளி சரணாலயம்
தேடி வருவோரக்கு நிழலே தரும்
உன் கவலை. எடுத்து காதில் ஓது
சாந்தம் உண்டாகும்
ஓம் சக்தி ஓம் சக்தி திருநாம்மே
ஓயாமல் சொன்னாலே நலமாகுமே .....(மனமே ்

0 comments:

Post a Comment