Sample Text

August 7, 2014

சமயபுரத்தாளே

மலர்மிசை ஏகி
மானடி அருளும்  தாயே
எண்திசை மேவி
நீடுவாழ வரம் தருவாயே ...
ஓம சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .....(slow )்
சமயபுரத்தாளே உலகங்கள் வாழுதம்மா
மலையனூராளே வேதங்கள் பேசுதம்மா
பட்டணம் புதூர்ஆளும் மாகாளியே...(2)
உன் அருள்.என்னும் பொருள். வேண்டும் தருவாயம்மா
அம்மா .....தாயே .......
ஓம் ஆதியே போற்றி ..
ஓம் ஜோதியே போற்றி ..
ஓம் நாரணியே போற்றி ..
ஓம் பூரணியே போற்றி ..
ஓம் ஈஸ்வரியேபோற்றி ..
ஓம் மாகாளியே. போற்றி. ஓம்
திருநாக குடை கீழே. வானும் மண்ணும ஒளியாக உருமாறி
வருவாயே. காளி யம்மா
ஓம் சக்தி. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் (fast )
கற்பூர தீபத்தில எந்நாளும்் ஓய்வின்றி்
சுயம்பாக அருள்வாயே காளியம்மா
வேற்காட்டு தேசத்திலே வேப்பிலையின் வாசத்திலே
திருப்பத நிழல் அருள வேண்டும்ம்மா (2)
உன் துணையே போதும்மம்மா-எனறும் உன் மடியே சரணம்ம்மா
அம்மா தாயே ....அம்மா ..(சமய
ஓம் கார்த்தியாயிணியே போற்றி
ஓம் தாட்சாயிணியே போற்றி
ஓம் நித்யகல்யாணியே போற்றி
ஓம் பரமேஸ்வரியே போற்றி
ஓம் மாகாளியே போற்றி ஓம் ..
கருமாரி அபிராமி மாகாளி எனப்பாடி
என் நாளும் துதிப்பேனே காளியம்மா
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் (fast )
மனம் எனும் மழலைக்கு
தாய் என்றால் நீதானே
தாலாட்ட வருவாயே காளியம்மா
கடயூர் காரிகையே
காளியூர் அம்பிகையே
என் குறை தீர்க்க ஓடி வருவாயம்மா
என் கண்ணீர் போதும்ம்மா
உனக்கு அபிஷேகம் ஆகும்ம்மா
தாயே காளி அம்மா ....(சமய

0 comments:

Post a Comment