Sample Text

October 25, 2014

nandha nee

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம ஏனோ வா வா

விழி மீனாடும் விழி
மொழி தேனாடும் மொழி
குழல் பூவாடும் குழல்
எழில் நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையில் மோகன கலையே
வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம ஏனோ வா வா

ஆயிரம் மின்னல் ஊர் உருவாகி
ஆக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம ஏனோ வா வா

ஆகமம் தந்த சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாளோ
மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன்
சோகத்தில் ஆட இறங்கி வந்தாளோ

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம ஏனோ வா வா

September 13, 2014

பெரிய புராணம்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுளாவிய நீர்மலி வேணியன்
அழகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிவன் அடி வாழ்த்தி வணங்குமாறு

என்றும் இன்பம் பெருகும் இயல்பினை
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மண்நுளார் அடியாராவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்

சிவம் சிவம்

அண்ணாமலையே அருணாச்சலனே
லிங்கேஸ்வரனே சரணம்

ஹர ஹர சங்கர
சிவ சிவ சங்கர
ஐந்தெழுத்தோனே சரணம்

ஓம் நம சிவாய. ஓம். நம. சிவாய

சிவம் சிவம்
நமச்சிவாய ஓம்
பார்வதி பதையே
மகாதேவனே நமச்சிவாய ஓம் (1)

உமைக்கொரு இடம்கொடுத்த
அர்த்த நாரீஸ்வரா

எனக்கொரு வரம் கொடுப்பாய்
அஷ்டலிங்கேஸவரா

தினந்தோறும உனைப் பாட வரம்
தருவாய்ய்யா பிரக தீஸ்வரா

நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
                                                   (சிவம்
இருமூர்த்தி கூடி அக்னீஸவராகும் உந்தன் அடிமுடி தேடி அலைந்ததை நா....னும் பாடிடுவேன்

ஊருடன் கூடி கிரிவலம் வந்து உன்னை வணங்கிடுவேன்
ஆருட தரிசனம் அழகை கண்டு உள்ளம் உருகிடுவேன்

தேவா....ரம். ஈன்ற திருமார்பனே
பே...ர்ருள் என்றும் வேண்டுமய்யா சிவமே சிவமே. சிவமே

நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய (1)
                                     (சிவம்
நமச்சிவாயம் வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க

வாயுலிங்கமாக வருணலிங்கமாக
அஷ்டலிங்கமாக நீ இருக்கும் அழகினை அறிந்திடுவேன்

கார்த்திகை தீபம் கண்டிட
எந்தன் கைகள் வணங்கிடுவேன்
தீபம் கண்டதும் கண்ணில் கண்ணீர் ஆறாய்ப் பெருகிடுதே

அருள் வேண்டி வந்தாலே உன்னிடத்தில்
பொருள் கோடி தருவாயே பூமுகத்தில்
சிவமே சிவமே சிவமே

நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய (1)
                                       (சிவம் ...

அடுக்கு மல்லி

அடுக்குமல்லி பூவெடுத்து
ஆசையுடன் ஓடிவந்தோம்
அருள்வாக்கு சொல்லிவிடு மாகாளித்தாயே

செவ்வரளி பூவெடுத்து
சிரத்தையுடன் வந்துவிட்டோம்
சிரித்த முகம். காட்டிவிடு
மாகாளித்தாயே

மாகாளித்தாயே ...மாகாளித்தாயே
மனமிரங்கும் மனமிரங்கும் மாகாளித்தாயே

பவளமல்லி பூவெடுத்து
பாசத்துடன் ஓடிவந்தோம்
பாவங்களை போக்கிவிடு மாகாளித்தாயே

மரகதப்பூ எடுத்து வந்து
மன்றாடிக் கேட்டு கொண்டோம்
மனக்குறையைத் தீர்த்துவிடு மாகாளித்தாயே
                                    (மாகாளித்தாயே
வேப்பந்தழை தொங்கவிட்டு
வீதிகளை அலங்கரித்தோம்
வியாதிகளை தீர்த்துவிடு மாகாளித்தாயே

மாவிளக்கு எடுத்து வந்து
மண்டியிட்டு கேட்டு விட்டோம்
மடிப்பிடிச்சை கொடுத்துவிடு மாகாளித்தாயே
                               (மாகாளித்தாயே
வீரசூலம் கையில் கொண்டு
விதவிதமாய் உடையணிந்து
வீதி உலா வந்துவிடும் மாகாளித்தாயே

வினைகளெல்லாம் தீர்த்துவைத்து
விருப்பங்களை பூர்த்தி செய்து
விடியல்தனை தந்துவிடும் மாகாளித்தாயே
                              (மாகாளித்தாயே
சிவப்பு வண்ண உடையணிந்து
சிங்க வாகனம் ஏறி
செருக்குடனே வந்துவிட்டாள் மாகாளித்தாயே

பெற்றவளே பெரியவளே
பிரியமான நல்லவளே -உன்
பிள்ளைகளை காக்க வேண்டும் மாகாளித்தாயே
                                (மாகாளித்தாயே

சுடராய் தோன்றி்

சுடராய்த் தோன்றி
நெருப்பாய் வளர்ந்து
ஜோதிவடிவாய் ஆனவளே

கூழைத் தந்தோம்
குலவை போட்டோம்
குலத்தை காத்திட வந்திடம்மா

காளி ...காளி ....காளி ....எங்கள்
காவல் தெய்வம் மாகாளி

சுயம்பாய் வந்தாய்
உறவாய் நின்றாய்
பட்டணம் புதூர் செழிக்க வைத்திடம்மா

காற்றாய் வந்தாய்
கனலாய் வந்தாய்
கருணை காட்டிடு காளியம்மா
                                   (ஓம் காளி ....
நிழலாய் வந்தாய்
நெஞ்சினில் நின்றாய்
நித்தமும் காட்சி தந்திடம்மா

மாவைத் தந்தோம்
மலரைத் தந்தோம்
மனதைத் தேற்றிட வந்திடம்மா
                              (ஓம் காளி.....
தீபம் போட்டோம்
திரு நீரணிந்தோம்
தயவு காட்டிடு காளியம்மா

ஒளியாய் வந்தாய்
உள்ளத்தில் நின்றாய்
ஒற்றுமை காத்திடு காளியம்மா
                                 (ஓம் காளி .....
எளிதினில் வந்தாய்
ஏழைக் குதவினாய்
எங்களைக் காத்திட்ட காளியம்மா

எல்லா வளமும்
எங்களுக்களித்து
ஏற்றம் கொடுத்திட்ட வள்ளலம்மா
                                       (ஓம் காளி ....


August 20, 2014

அரிது அரிது

அறியது கேட்கின் வரிவடிவேலோய் அறிது அறிது மானிடராதல் அறிது...
மானிடராய் பிறந்தும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அறிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும்தான் செய்தல் அறிது
தானமும் தவமும்தான் செய்தலாயினும்
வானவர் நாடு வழி திறந்திடுமே.
கொடியது கேட்கின் வரிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
அதனினும் கொடிது; இளமையில் வறுமை
அதனினும் கொடிது;ஆற்றொணாக் கொடுநோய்
அதனினும் கொடிது; அன்பிலாப் பெண்டிர்
அதனினும் கொடிது அவர்கையில் இன்புற உண்பது தானே.
பெரியது கேட்கின் நெறிதமிழ வேலோய்
் பெரிது பெரிதுபுவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமான் உந்தியில் வந்தோன
் கரியமானோ அலைகடற் துயின்றோன
் அலைகடலோ குறுமுனியின் கையில் அடக்கம
் குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியின் திருமண் புவியோ அரவினிற்கொரு
தலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம
் உமையோ இறைவன் பாகத்தொடுக்கம
் இறைவனோ தொண்டருளத்தொடுக்கம் தொண்டர் தம் பெருமையைச் சொல்லவும் பெரிதே.....!
இனியது கேட்கின் தனிநெடுவேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்
அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்
அதனினும் இனிது அறிவுளாரைக் கனவினும் நனவினும் காண்பதுதானே.

(புதியது கேட்கும தமிழ் நெறி வேலோய் )
் என்றும் புதியது
பாடல் என்றும் புதியது
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது அருள் நிறைந்த புலவரு  நெஞ்சில் அமுதம் என்னும் தமிழ் கொடுத்த பொருள ்நிறைந்த பாடல் என்றும் புதியது...
முருகன்...என்ற பெயரில்... வந்த அழகே என்றும் புதியது
முருவல் காட்டும்
குமரன் கொண்ட இளமை என்றும் புதியது
உனைப்பெற்ற அன்னையர்க்கு உனது லீலை புதியது
உனது தந்தை இறைவனுக்கோ ் வேலும்... மயிலும்...
உனது தந்தை இறைவனுக்கோ ் வேலும் மயிலும். புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது திங்களுக்கும் ஞாயிறுக்கும
் கந்தன் மேனி புதியது

சேர்ந்தவர்க்கு  வழங்கும்  கந்தன் கருணை புதியது
அறிவில் அறியது...
அருளில் பெரியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
அள்ளி அள்ளி உண்ண உண்ண உனது தமிழ் இனியது
முதலில் முடிவது (முடிவு அது) முடிவில் முதல் அது
முதலில் முடிவது முடிவில் முதல் அது
மூன்று காலம் உணர்ந்தவர்க்கு ஆறுமுகம் புதியது

August 19, 2014

நவக்கிரக நாயகியே

நவக்கிரக நாயகியே கருமாரி
நலங்கள் யாவும் தருபவளே அருள்மா....ரி .......(2)
மங்கள வடிவான சங்கரியே (1)
மாலவன் சோதரியே வைஷ்ணவி யே
திரு மாலவன் சோதரியே. வைஷ்ணவியே ...                                   ...அம்மா .(நவக்கிரக
சிக்கலிலே வேல் கொடுத்த தாயே
சீர்காழியில் பால். கொடுத்ததும் நீயே ...தாயே (1)
மக்கள் துயரைத்  தாங்கும் தஞ்சை முத்துமா.....ரி (1)
மாங்கல்யம் காப்பாற்றும் மீனாட்சியே /                                            
                      மதுரை மீனாட்சியே
நொய்யல் கரை வாழும் மா/காளியே
நோய்களெல்லாம் தீர்க்கும் உந்தன் அருளாசியே /உந்தன் அருளாசியே
                   ..     ..அம்மா.(நவக்கிரக
குங்குமத்தில் சிரிக்கின்ற கற்பகாம்பிகே
              மயிலை கற்பகாம்பிகே
குலமாதர் சௌபாக்ய காமாட்சியே
                      காஞ்சி காமாட்சியே (1)
கங்கை கரை /அமர் விசாலாட்சியே
                          காசி விசாலாட்சியே
கலைகளெல்லாம் தந்தருளும் மூகாம்பிகே /
கொல்லூர் மூகாம்பிகே .(நவக்கிரக
ஞான....மழை பொழியும் கலைமகள் நீயே
நல்லறச் செல்வம் தரும் அலைமகள் /நீயே (1)
வேதம் புகழ் பாடும் மலைமகள் நீயே
வெற்றி எல்லாம் தந்தருளும் வேல/வன் தாயே
       அம்மா (நவக்கிரக