Sample Text

October 25, 2014

nandha nee

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம ஏனோ வா வா

விழி மீனாடும் விழி
மொழி தேனாடும் மொழி
குழல் பூவாடும் குழல்
எழில் நீயாடும் எழில்
மின்னி வரும் சிலையில் மோகன கலையே
வண்ண வண்ண மொழியில் வானவர் அமுதே
ஆசை நெஞ்சின் தெய்வம் நீயே ஆடி நிற்கும் தீபம் நீயே
பேசுகின்ற வீணை நீயே
கனி இதழ் அமுதினை வழங்கிட அருகினில் வா

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம ஏனோ வா வா

ஆயிரம் மின்னல் ஊர் உருவாகி
ஆக வந்தவள் நீயே
அகத்தியன் போற்றும் அருந்தமிழ் நீயே
அருந்ததி போலே பிறந்து வந்தாயே

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம ஏனோ வா வா

ஆகமம் தந்த சீதையும் இன்று
ராகவன் நானென்று திரும்பி வந்தாளோ
மேகத்தில் ஆடும் ஊர்வசி எந்தன்
சோகத்தில் ஆட இறங்கி வந்தாளோ

நந்தா நீ என் நிலா நிலா
நாயகன் மடியில் காண்பது சுகமே
நாணம ஏனோ வா வா

0 comments:

Post a Comment