சுடராய்த் தோன்றி
நெருப்பாய் வளர்ந்து
ஜோதிவடிவாய் ஆனவளே
கூழைத் தந்தோம்
குலவை போட்டோம்
குலத்தை காத்திட வந்திடம்மா
காளி ...காளி ....காளி ....எங்கள்
காவல் தெய்வம் மாகாளி
சுயம்பாய் வந்தாய்
உறவாய் நின்றாய்
பட்டணம் புதூர் செழிக்க வைத்திடம்மா
காற்றாய் வந்தாய்
கனலாய் வந்தாய்
கருணை காட்டிடு காளியம்மா
(ஓம் காளி ....
நிழலாய் வந்தாய்
நெஞ்சினில் நின்றாய்
நித்தமும் காட்சி தந்திடம்மா
மாவைத் தந்தோம்
மலரைத் தந்தோம்
மனதைத் தேற்றிட வந்திடம்மா
(ஓம் காளி.....
தீபம் போட்டோம்
திரு நீரணிந்தோம்
தயவு காட்டிடு காளியம்மா
ஒளியாய் வந்தாய்
உள்ளத்தில் நின்றாய்
ஒற்றுமை காத்திடு காளியம்மா
(ஓம் காளி .....
எளிதினில் வந்தாய்
ஏழைக் குதவினாய்
எங்களைக் காத்திட்ட காளியம்மா
எல்லா வளமும்
எங்களுக்களித்து
ஏற்றம் கொடுத்திட்ட வள்ளலம்மா
(ஓம் காளி ....
்
0 comments:
Post a Comment