Sample Text

September 13, 2014

பெரிய புராணம்

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்
நிலவுளாவிய நீர்மலி வேணியன்
அழகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிவன் அடி வாழ்த்தி வணங்குமாறு

என்றும் இன்பம் பெருகும் இயல்பினை
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மண்நுளார் அடியாராவர் வான்புகழ்
நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்

சிவம் சிவம்

அண்ணாமலையே அருணாச்சலனே
லிங்கேஸ்வரனே சரணம்

ஹர ஹர சங்கர
சிவ சிவ சங்கர
ஐந்தெழுத்தோனே சரணம்

ஓம் நம சிவாய. ஓம். நம. சிவாய

சிவம் சிவம்
நமச்சிவாய ஓம்
பார்வதி பதையே
மகாதேவனே நமச்சிவாய ஓம் (1)

உமைக்கொரு இடம்கொடுத்த
அர்த்த நாரீஸ்வரா

எனக்கொரு வரம் கொடுப்பாய்
அஷ்டலிங்கேஸவரா

தினந்தோறும உனைப் பாட வரம்
தருவாய்ய்யா பிரக தீஸ்வரா

நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய
                                                   (சிவம்
இருமூர்த்தி கூடி அக்னீஸவராகும் உந்தன் அடிமுடி தேடி அலைந்ததை நா....னும் பாடிடுவேன்

ஊருடன் கூடி கிரிவலம் வந்து உன்னை வணங்கிடுவேன்
ஆருட தரிசனம் அழகை கண்டு உள்ளம் உருகிடுவேன்

தேவா....ரம். ஈன்ற திருமார்பனே
பே...ர்ருள் என்றும் வேண்டுமய்யா சிவமே சிவமே. சிவமே

நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய (1)
                                     (சிவம்
நமச்சிவாயம் வாழ்க
நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க

வாயுலிங்கமாக வருணலிங்கமாக
அஷ்டலிங்கமாக நீ இருக்கும் அழகினை அறிந்திடுவேன்

கார்த்திகை தீபம் கண்டிட
எந்தன் கைகள் வணங்கிடுவேன்
தீபம் கண்டதும் கண்ணில் கண்ணீர் ஆறாய்ப் பெருகிடுதே

அருள் வேண்டி வந்தாலே உன்னிடத்தில்
பொருள் கோடி தருவாயே பூமுகத்தில்
சிவமே சிவமே சிவமே

நமச்சிவாய நமச்சிவாய ஓம் நமச்சிவாய (1)
                                       (சிவம் ...

அடுக்கு மல்லி

அடுக்குமல்லி பூவெடுத்து
ஆசையுடன் ஓடிவந்தோம்
அருள்வாக்கு சொல்லிவிடு மாகாளித்தாயே

செவ்வரளி பூவெடுத்து
சிரத்தையுடன் வந்துவிட்டோம்
சிரித்த முகம். காட்டிவிடு
மாகாளித்தாயே

மாகாளித்தாயே ...மாகாளித்தாயே
மனமிரங்கும் மனமிரங்கும் மாகாளித்தாயே

பவளமல்லி பூவெடுத்து
பாசத்துடன் ஓடிவந்தோம்
பாவங்களை போக்கிவிடு மாகாளித்தாயே

மரகதப்பூ எடுத்து வந்து
மன்றாடிக் கேட்டு கொண்டோம்
மனக்குறையைத் தீர்த்துவிடு மாகாளித்தாயே
                                    (மாகாளித்தாயே
வேப்பந்தழை தொங்கவிட்டு
வீதிகளை அலங்கரித்தோம்
வியாதிகளை தீர்த்துவிடு மாகாளித்தாயே

மாவிளக்கு எடுத்து வந்து
மண்டியிட்டு கேட்டு விட்டோம்
மடிப்பிடிச்சை கொடுத்துவிடு மாகாளித்தாயே
                               (மாகாளித்தாயே
வீரசூலம் கையில் கொண்டு
விதவிதமாய் உடையணிந்து
வீதி உலா வந்துவிடும் மாகாளித்தாயே

வினைகளெல்லாம் தீர்த்துவைத்து
விருப்பங்களை பூர்த்தி செய்து
விடியல்தனை தந்துவிடும் மாகாளித்தாயே
                              (மாகாளித்தாயே
சிவப்பு வண்ண உடையணிந்து
சிங்க வாகனம் ஏறி
செருக்குடனே வந்துவிட்டாள் மாகாளித்தாயே

பெற்றவளே பெரியவளே
பிரியமான நல்லவளே -உன்
பிள்ளைகளை காக்க வேண்டும் மாகாளித்தாயே
                                (மாகாளித்தாயே

சுடராய் தோன்றி்

சுடராய்த் தோன்றி
நெருப்பாய் வளர்ந்து
ஜோதிவடிவாய் ஆனவளே

கூழைத் தந்தோம்
குலவை போட்டோம்
குலத்தை காத்திட வந்திடம்மா

காளி ...காளி ....காளி ....எங்கள்
காவல் தெய்வம் மாகாளி

சுயம்பாய் வந்தாய்
உறவாய் நின்றாய்
பட்டணம் புதூர் செழிக்க வைத்திடம்மா

காற்றாய் வந்தாய்
கனலாய் வந்தாய்
கருணை காட்டிடு காளியம்மா
                                   (ஓம் காளி ....
நிழலாய் வந்தாய்
நெஞ்சினில் நின்றாய்
நித்தமும் காட்சி தந்திடம்மா

மாவைத் தந்தோம்
மலரைத் தந்தோம்
மனதைத் தேற்றிட வந்திடம்மா
                              (ஓம் காளி.....
தீபம் போட்டோம்
திரு நீரணிந்தோம்
தயவு காட்டிடு காளியம்மா

ஒளியாய் வந்தாய்
உள்ளத்தில் நின்றாய்
ஒற்றுமை காத்திடு காளியம்மா
                                 (ஓம் காளி .....
எளிதினில் வந்தாய்
ஏழைக் குதவினாய்
எங்களைக் காத்திட்ட காளியம்மா

எல்லா வளமும்
எங்களுக்களித்து
ஏற்றம் கொடுத்திட்ட வள்ளலம்மா
                                       (ஓம் காளி ....