Sample Text

September 13, 2014

அடுக்கு மல்லி

அடுக்குமல்லி பூவெடுத்து
ஆசையுடன் ஓடிவந்தோம்
அருள்வாக்கு சொல்லிவிடு மாகாளித்தாயே

செவ்வரளி பூவெடுத்து
சிரத்தையுடன் வந்துவிட்டோம்
சிரித்த முகம். காட்டிவிடு
மாகாளித்தாயே

மாகாளித்தாயே ...மாகாளித்தாயே
மனமிரங்கும் மனமிரங்கும் மாகாளித்தாயே

பவளமல்லி பூவெடுத்து
பாசத்துடன் ஓடிவந்தோம்
பாவங்களை போக்கிவிடு மாகாளித்தாயே

மரகதப்பூ எடுத்து வந்து
மன்றாடிக் கேட்டு கொண்டோம்
மனக்குறையைத் தீர்த்துவிடு மாகாளித்தாயே
                                    (மாகாளித்தாயே
வேப்பந்தழை தொங்கவிட்டு
வீதிகளை அலங்கரித்தோம்
வியாதிகளை தீர்த்துவிடு மாகாளித்தாயே

மாவிளக்கு எடுத்து வந்து
மண்டியிட்டு கேட்டு விட்டோம்
மடிப்பிடிச்சை கொடுத்துவிடு மாகாளித்தாயே
                               (மாகாளித்தாயே
வீரசூலம் கையில் கொண்டு
விதவிதமாய் உடையணிந்து
வீதி உலா வந்துவிடும் மாகாளித்தாயே

வினைகளெல்லாம் தீர்த்துவைத்து
விருப்பங்களை பூர்த்தி செய்து
விடியல்தனை தந்துவிடும் மாகாளித்தாயே
                              (மாகாளித்தாயே
சிவப்பு வண்ண உடையணிந்து
சிங்க வாகனம் ஏறி
செருக்குடனே வந்துவிட்டாள் மாகாளித்தாயே

பெற்றவளே பெரியவளே
பிரியமான நல்லவளே -உன்
பிள்ளைகளை காக்க வேண்டும் மாகாளித்தாயே
                                (மாகாளித்தாயே

0 comments:

Post a Comment